Search This Blog

Sunday, March 15, 2020

கழுத்து, இடுப்பு மற்றும் மூட்டு வலிகளைப் போக்க உதவும் அற்புத கசாயம்

0 comments

கழுத்து, மூட்டு, இடுப்பு வலிகளால் அவதிப்படுகின்றீர்களா? கவலைப்படாதீங்க வாத நாராயணன் கீரைக் கசாயத்தை வைத்துக் குடியுங்கள் வலி உடனே பறந்தோடும்.

தேவையான பொருட்கள்

வாத நாராயணன் கீரை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை

முதலில் வாத நாராயணன் கீரையை நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வாத நாராயணன் கீரை மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 100 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.




பயன்கள்

இந்தக் கசாயம் மூட்டு வலி, கழுத்து வலி மற்றும் இடுப்பு வலிகளைப் போக்க உதவும். வலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் கழுத்து, இடுப்பு மற்றும் மூட்டு வலிகளுக்கு நிவாரணமாக அமையும்.

இரவு படுக்கப்போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.




குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

No comments:

Post a Comment