Tuesday, March 10, 2020

TNPCB Recruitment 2020: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
அதன் படி, 242 பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1. உதவிப் பொறியாளர்:
உதவிப் பொறியாளர் பணிக்கு 78 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு ₹37700 - ₹119500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.



இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி: இளநிலையில் சிவில்/கெமிக்கல்/சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் முதுநிலையில் சிவில்/கெமிக்கல்/சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2. சுற்றுச்சூழல் விஞ்ஞானி:
இந்த பணிக்கு 70 காலி பணியிடங்கள் உள்ளன. ₹37700 - ₹119500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி: வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், கடல்சார் உயிரியல், உயிரி வேதியியல், சுற்றுச்சூழல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் நச்சுயியல், அனாலிட்டிகல் வேதியியல், அப்ளைடு வேதியியல் ஆகிய பிரிவில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்




3. இளநிலை உதவியாளர்:
இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு 38 இடங்கள் காலியாக உள்ளன. ₹19500 முதல் ₹62 ஆயிரம் வரை ஊதியம். இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் கணினி படிப்பில் 6 மாத பட்டயம்/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

4. தட்டச்சர்:
தட்டச்சர் பணிக்கு 56 இடங்கள் காலியாக உள்ளன. ₹19500 முதல் ₹62 ஆயிரம் வரை ஊதியம்.
கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் 6 மாத பட்டயம்/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி?

www.tnpcb.gov.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26-03-2020




தகுதிகள்:
விண்ணப்பிக்க வயது குறைந்தபட்சம் 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும் . ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகபட்சமாக வயது 35 ஆக இருக்க வேண்டும் ; ஏனையோர் 30 வயதாக இருக்க வேண்டும்

தேர்வு கட்டணம்: ஆதிதிராவிடர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ₹250 மற்றவர்களுக்கு ₹500

தேர்வு நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News