Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 17, 2020

முதற்கட்டமாக 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியீடு: தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் 10 ஆம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகத்தை இணையத்தில் வெளியிட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும், அதன் தொடர்ச்சியாக மற்ற வகுப்புகளுக்கும் இணையத்தில் இ-புத்தகம் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த தகவல் குறுஞ்செய்தி வாயிலாக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment