Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 18, 2020

ஒரு சிலிண்டர் வாங்கிய பின் 15 நாட்களுக்கு பிறகுதான் முன்பதிவு - புதிய கட்டுப்பாடு



ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் வீடுகளில் சமையல், உணவு பண்டங்கள் தயாரிப்பு என்று சமையல் வேலை அதிகமாகவே நடக்கிறது. இதனால் கேஸ் சிலிண்டர்கள் அதிக அளவில் செலவளிவதாக கூறப்படுகிறது. முன்பு கேஸ் சிலிண்டர்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதும் கியாஸ் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று கருதி முன்பதிவு செய்வது அதிகரித்தது. இதையடுத்து ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு 15 நாட்களுக்கு பிறகுதான் முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் 250 கியாஸ் வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஏஜென்சியிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 சிலிண்டர் வரை சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி தினமும் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் சிலிண்டர்கள் வரை வீடுகளுக்கு சப்ளை செய்து வருவதாக கியாஸ் ஏஜென்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment