Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 15, 2020

அடுத்த_19_நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!



#ஒரே_நபர்_கொள்கை: அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
#ஒரே_ஆடை:* அப்படி வெளியே செல்லும் நபர், ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் ஒரே ஆடையை அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். அது முழுமையான ஆடையாக இருக்க வேண்டும். இந்த ஆடைகளை மற்ற ஆடைகளுடன் கலந்துவிட வேண்டாம்.
#ஒரே_வாலெட்:* வெளியே செல்லும் நபர், ஒரே வாலெட்டைப் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்ற பணம், மற்றும் சில்லறைகளுடன் கலந்துவிடக்கூடாது!
#ஒரே_பை:* ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும்போதும் ஒரே பையை எடுத்து செல்லலாம். வீட்டுக்கு வந்த பின்னர் அந்தப் பையை தனியே வைத்துவிடலாம். வீட்டுக்கு வெளியே வைப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அங்கேயே வைத்துவிடுவது நல்லது!
#ஒரே_வாகனம்:* இன்று பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் சூழல் இருக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் வாகனங்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்பவர்கள், ஒரே வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்
#ஒரே_ஒருமுறை’:* அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லலாம் என்பதால், ஒவ்வொன்றுக்காகச் செல்லாமல், முறையான திட்டமிடுதலுடன் ஒரே ஒருமுறை மட்டும் வெளியே சென்று வரலாம். அந்த ஒரே பயணத்தில், அனைத்து விதமான பணிகளையும் செய்து முடிக்கும்படி செய்யலாம்!
வெளியே செல்பவர்கள் மொபைல் போனை எடுத்துச் செல்ல வேண்டாம். ஒருவேளை எடுத்துச் சென்றாலும், வெளியே அதைப் பயன்படுத்த வேண்டாம்.
நாம் அதிகம் பயன்படுத்தாத கை அல்லது கை முட்டி கொண்டு கதவுகளைத் திறப்பது, பொத்தான்களை அழுத்துவது போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அந்த கையைக்கொண்டு நம் முகத்தைத் தொடுவதற்கான வாய்ப்பு குறைவு... இதனால் பாதிப்பை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.
வெளியே செல்லும்போது, அத்தியாவசியம் என்றாலும்கூட கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். விரைவாகப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிட வேண்டும்.
*வீட்டுக்கு வந்ததும் செய்ய வேண்டியது:* வெளியே செல்ல பயன்படுத்தப்பட்ட ஆடை, பை, சாவி, வாலெட் முதலிய பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். கட்டாயம் மற்ற பொருள்களுடன் கலக்கக் கூடாது. வீட்டில் எந்தப் பொருளையும் தொடுவதற்கு முன்பாக கை மற்றும் முகத்தை நன்றாகக் கழுவிவிட வேண்டும். முன்னரே சொன்னது போல், வெளியே செல்லும்போது மொபைல் போனை தவிர்ப்பது நல்லது. மீறி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால், அதை வீட்டுக்கு வந்ததும் சானிடைஸரால் துடைத்துவிட்டுப் பயன்படுத்துவது சிறந்தது

No comments:

Post a Comment