Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 18, 2020

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வி.ஆர்.எஸ் !! செங்கோட்டையன்



திருச்சி தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ;
பள்ளி இடை நிற்றல் இந்தியாவிலேயே , தமிழ்நாடு தான் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக் தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்.
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் உள்ளது இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வாரம் 1 முறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் 100 ரூபாய் ஊக்க தொகையை அதிகரித்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும். இடைநிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment