Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 11, 2020

ரூ.500 க்கு விலையிலான "மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை " நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை!


தமிழ் நாட்டில்தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மண்டலங்களிலும் , நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் சில்லறையாகவும் மற்றும் தொகுப்பாகவும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசு பிறப்பித்த ஊரடங்கு அமுலில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்து அதன் மூலம் மளிகைப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் ஏற்படும் காரணத்தினால் , வருமானம் இழந்து தவிக்கும் ஏழை , எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.500 / - விலையிலான "மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை " நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டி.யு.சி.எஸ் நிறுவனத்தின் மூலம் மளிகைப் பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இணைப்பில் கண்டவாறு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. மளிகைப் பொருட்கள் தங்கள் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பெறப்பட்ட குறிப்பிடப்பட்ட அளவுகளில் பொட்டலமிடப்பட வேண்டும்.
மளிகைப் பொருட்களின் பைகள் தயாரானவுடன் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான மளிகை தொகுப்பு பைகளை விற்பனை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.





No comments:

Post a Comment