Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 16, 2020

கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகள் எப்போது ? அறிவிப்பை வெளியிட்ட உயர் கல்வித்துறை.



கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்தது. இதனால், மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் நடக்கவிருந்த பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதுடன் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 14 ம் தேதியுடன் யுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை ஏப்ரல் 30 ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. அதுவரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்லூரிகள் , பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டில் நடக்கும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜுன், ஜுலை மாதங்களுக்குப் பிறகே செமஸ்டர் தேர்வுகள் நடப்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment