Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 2, 2020

ஜியோ போன் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் "ரீசார்ஜ் ஏடிஎம்" என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது என்பது தெரிந்ததே
ஏடிஎம் இயந்திரம் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழிமுறைக்கு OTP தேவைப்படாது.
* உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும்.
* மெயின் மெனுவில் "ரீசார்ஜ்" எனும் விருப்பத்தை தட்டவும் அல்லது தேர்வு செய்யவும். * நீங்கள் "ரீசார்ஜ்" மெனுவிற்குள் வந்ததும், உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும்.
* உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, OK / ENTER பொத்தானை அழுத்தவும்
* இப்போது, தேவையான இடத்திலல் குறிப்பிட்ட ரீசார்ஜ் தொகையை உள்ளிடவும்.
* பின்னர் ரீசார்ஜ் மதிப்பை உறுதிசெய்து என்டர்-ஐ அழுத்தவும்
* ஏடிஎம் இயந்திரத்தின் ஸ்க்ரீன் இப்போது ரீசார்ஜ் செய்தியைக் காண்பிக்கும், அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதை தொடர்ந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மெசேஜைப் பெறுவீர்கள்,
இந்த புதிய ஜியோ ரீசார்ஜ் வழிமுறையானது AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம்களில் பயன்படுத்தி கொள்ளலாம்

No comments:

Post a Comment