Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 1, 2020

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் விளக்கம்!



கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பரவலாக செய்தி வந்த நிலையில் நேற்று மத்திய அரசு தற்போதைக்கு நீட்டிக்கும் நிலை இல்லை என தெரிவித்தது.
இது குறித்து முதல்வரிடம் கேட்டபோது, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

1 comment:

  1. ஊரடங்கு நீட்டித்தால் நாட்டுக்கு நல்லது!

    ReplyDelete