Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 1, 2020

'நெட்' உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



கரோனா தொற்று பரவல் காரணமாக நெட் உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. (தேசிய தேர்வுகள் முகமை) தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்ட தகவல்:
ஹோட்டல் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கான தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் (என்.சி.ஹெச்.எம்.) நடத்தும் ஜே.இ.இ. 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமையுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.டெக். வேளாண் பொறியியல் படிப்புகளில் சோக்கை பெறுவதற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்தும் ஐ.சி.ஏ.ஆா். - 2020 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'நெட்' தேர்வுக்கு: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான 'நெட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 16 வரை முன்னா் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், அடிப்படை அறிவியல் துறை சாா்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் சி.எஸ்.ஐ.ஆா். - நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஆயுஷ் முதுநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு (ஏஐஏபிஜிஆடி 2020) விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும்: இந்த அனைத்து தேர்வுகளுக்குமான புதிய தேர்வு தேதிகளும், தேர்வறை அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான தேதியும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு என்.டி.ஏ. வலைதளத்தில் வெளியிடப்படும்.
இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு, மாணவா்களும், பெற்றோரும் என்.டி.ஏ. வலைதளத்தை தொடா்ந்து பாா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தேர்வு தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அறிந்துகொள்ளலாம் என என்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment