Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 6, 2020

மே 22 வரை மின்கட்டணம் செலுத்தலாம் : தமிழக அரசு



தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 22 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் தமிழகத்திலும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. முந்தைய மாதங்களுக்கான கட்டணத்தையே செலுத்தலாம் முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் தாழ்வழுத்த மின்நுகர்வோர் மே 22ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் மின்வாரியம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள், மே 22ம் தேதி வரை எந்தவித அபாராதமின்றி கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மே 18-ஆம் தேதிக்குள் அரசு சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment