Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 7, 2020

இன்று வானில் அற்புத 'சூப்பர் பிளவர் மூன்' காட்சி நேரடியாக காணலம்!



இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி, 'சூப்பர் பிளவர் மூன்' நிகழ்வு இன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை, மக்கள் சாதாரணமாக பார்க்கலாம். சந்திரன், தன் சுழற்சி பாதையில், பூமியில் இருந்து வெகு துாரம் செல்வது, 'அபோஜி' என, அழைக்கப்படுகிறது.
அப்போது, பூமியில் இருந்து சந்திரன், 4.௫ லட்சம் கி.மீ., தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் வருவது, 'பெரிஜி' என, அழைக்கப்படுகிறது. இந்த தருணத்தில், பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான துாரம், ௩.௬ லட்சம் கி.மீ.,யாக இருக்கும். இந்த பெரிஜி, பவுர்ணமிக்குநெருக்கத்தில் வரும் போது, 'சூப்பர் மூன்' என, அழைக்கப்படுகிறது. இந்த மாதம், 'பெரிஜி சூப்பர் பிளவர் மூன்' என்ற, வானியல் நிகழ்வை இன்று கண்டுகளிக்கலாம்.
இதுகுறித்து, பிர்லா கோளரங்க இயக்குனர், சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:ஒரு நீள் வட்டப் பாதையில், பூமியை சுற்றி வரும் சந்திரன், 27 நாட்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும். பவுர்ணமி நாளில் நடக்கும் இந்த நிகழ்வு, 'சூப்பர் மூன், பெரிஜி புளூ மூன்'என, அழைக்கப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களாகவே, 'பெரிஜி புளூ மூன்' நிகழ்வு நடந்து வருகிறது. இன்று ஆண்டின் நான்காவது, கடைசி நிகழ்வு இன்று நடக்க உள்ளது.
இந்த நிகழ்விற்கு ஒவ்வொரு முறையும், ஒரு பெயர் வைக்கப்படுகிறது. இன்று நடக்கும் நிகழ்விற்கு, 'சூப்பர் பிளவர் மூன்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதை, மக்கள் சாதாரணமாக காணலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment