
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து மே 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கரோனா அச்சுறுத்தலினால் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment