சி.பி.எஸ்.இ., தேர்வு கால அட்டவணை இன்று அறிவிப்பு


சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, இன்று(மே 18)அறிவிக்கப்பட உள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது, நிலைமைபடிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக, சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், ஒவ்வொரு பாடத்துக்கும் எப்போது தேர்வு நடக்கும் என்ற கால அட்டவணை, இன்று வெளியிடப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், நேற்று தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel