Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 31, 2020

வெயில் கொடுமை கண்ணையும் விட்டு வைக்கலயா, இதை விடாம செய்யுங்க!

கோடையில் உடல் சருமத்தை காட்டிலும் அதிக பாதுகாப்பு கண்களுக்கு தான் தர வேண்டும்.

கண்களின் ஆரோக்கியம் ஆயுளுக்கும் முக்கியமானது. இன்று கண்களுக்கு அதிகம் வேலை தரும் கணினி பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கண்களை குளுமைபடுத்த உரிய பராமரிப்போடு வறட்சி இல்லாமல் பாதுகாப்பாக வைத்து கொள்வதும் முக்கியம். சூரியனின் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை போன்றே கண்களையும் தாக்கி வறட்சியை உண்டாக்கிவிடுகிறது. இதனால் கண்களில் எரிச்சல், கண்களில் நீரின்றி உலர் கண்கள் பிரச்சனைக்கும் வழி செய்கிறது. இதனால் கண்ணழகும் ஆரோக்கியமும் காணாமல் போகிறது.

​முழுநேரமும் பாதுகாப்பு - கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க

கண்களை பாதிக்கும் கோடைக்காலத்தில் வெளியில் சென்றால் தான் பாதிப்பு என்றில்லை. வீட்டில் இருந்தாலும் உஷ்ணத்தால் பாதிப்பு இருக்கவே செய்யும். அதிலும் வெளியே செல்பவர்கள் நிச்சயம் கண்களின் வெயில் படாமல் பாதுகாப்பாக செல்வது நல்லது. இயன்றவரை காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது கண்களுக்கு பாதுகாப்பானது. இல்லையெனில் அரிப்பு, வறட்சி போன்றவை எளிதாக தாக்ககூடும் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.

கெட்ட கொழுப்பு ஈஸியா குறைய இதை சாப்பிட்டாவே போதுமாம், என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

தவிர்க்கமுடியாமல் வெளியே செல்லும் போது கண்களுக்கு உறுதியான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் தான். அதே போன்று வெளியில் செல்லும் போது அவ்வபோது சுத்தமான நீரில் கண்களை கழுவி கொள்வதன் மூலம் கண்கள் வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.

​சன் கிளாஸ் - கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க

கண்களின் மீது நேரடியாக புற ஊதாக்கதிர்கள் பாதிக்காமல் இருக்க சன் கிளாஸ் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். மிக அதிக விலை கொடுத்து வாங்கினால் மட்டும் தான் அவை புற ஊதாகதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்கும் என்னும் தவறான கருத்தை பலரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. நியாயமான விலையில் கிடைக்கும் சன் கிளாஸ் கூட சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து உங்கள் கண்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குகின்றன. அதனால் வெளியில் செல்லும் போது கண் பாதுகாப்பு வழங்கும் சன் கிளாஸ் மறக்க வேண்டாம். அதே போன்று ஒருவர் பயன்படுத்திய சன்கிளாஸை மற்றொருவர் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

​லென்ஸ் அணிபவர்கள் -கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க

கண்ணாடி அணிவதற்கு பதில் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கண் மருத்துவரின் ஆலோசனையோடு கோடைக்காலத்தில் கூடுதல் பராமரிப்பு மேற்கொள்வது நல்லது. குறீப்பாக நீண்ட கால பயன்பாடு என்று பயன்படுத்தும் லென்ஸ் வகைகள் இந்த நேரங்களில் சிறு அசெளகரியத்தை சந்தித்தாலும் அவை அதிகப்படியான தீங்கை கண்களுக்கு உண்டாக்கும். மிக கவனமாக ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து அணியவேண்டும்.

​கண்களை தேய்க்காதீர்கள் - கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க

கண்களில் தூசி இல்லாமல் அரிப்பு உண்டாகும் காலம் கோடைக்காலம். மென்மையான கண்களில் சற்று உறுத்தல் இருக்கும் போது உடனடியாக பலரும் கைகளை கொண்டு நன்றாக கண்களை தேய்ப்பார்கள். இதனால் கண்ணுக்குள் தூசி இருந்தால் அவை அங்கேயே தங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். அதனால் கண்களை தேய்க்காமல் உடனடியாக குளிர்ந்த சுத்தமான நீரை கொண்டு கண்களை கழுவினால் போதுமானது. இதனால் கண்களில் தொற்று பரவாமல் கண் சிவப்பு உண்டாகாமல் காக்கலாம்.

​ஒப்பனையில் கவனம் -கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க

நிச்சயம் இது பெண்களுக்கானது. கண்களில் மை, மஸ்காரா, காஜல் என்று அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வது உண்டு. கோடைக்காலங்களில் அதிக அளவு மேக் அப் பயன்பாடில்லாமல் இருப்பது பாதுகாப்பானது. அதே போன்று வெறும் கைகளால் கண்களுக்கு ஒப்பனை செய்ய வேண்டாம். எப்போதுமே இது பாதுகாப்பானதல்ல என்றாலும் கோடையில் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

​கண்ணுக்கு ஓய்வும் தேவை -கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க

கண்களுக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கமுடியாது என்று நாள் முழுக்க கணினியில் அமர்ந்திருப்பவர்கள் நிச்சயம் இதை செய்தே ஆகவேண்டும். கண்களில் அதிகப்படியான உஷ்ணமும், சிவப்பும், அரிப்பும் இந்த கோடையில் நிச்சயம் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வரக்கூடும்.

பெயரையே மறக்குமளவு மறதியை உண்டாக்கும் அல்சைமர் நோய் யாருக்கு வரும்!

தொடர்ந்து கணினியில் கண் பதிக்காமல் அவ்வபோது எழுந்து கண்களை சுத்தமான நீரில் கழுவுங்கள். ஓய்வு நேரங்களில் குளிர்ச்சியான வெள்ளரித்துண்டுகளை கண்களின் மீது வைத்து எடுங்கள். பன்னீர் பஞ்சில் தோய்த்து கண்களை மூடி கண்ணை சுற்றி ஒற்றி எடுங்கள்.

வெயிலுக்கு சருமமா, கண்களா என்ற வேறுபாடு தெரியாது. நாம் தான் விழிப்புணர் வோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment