Breaking

Sunday, May 31, 2020

முடி அழகை பாதுகாக்கும் நான்கே விஷயங்கள், எல்லோருக்குமானது, ஈஸியானதும் கூட!

முடி அழகா இருந்தா எந்த பராமரிப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் முடிக்கு தேவையான..

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பராமரிப்புகள் குறித்து கவனம் செய்கிறோம். சிலர் கூந்தல் நன்றாகவே இருக்கு இதற்கு தனி பராமரிப்பு தேவையே இல்லை என்று நினைத்து விட்டுவிடுவார்கள். இவை கூந்தலின் வலுவை கெடுத்துவிடும். நம் மூத்த தலைமுறையினர் முடி பராமரிப்பில் தனி கவனம் செலுத்த தேவை இருந்ததில்லை. அப்போது இயற்கை காற்றும், சுத்தமான நீரும், இயற்கை பொருள்களும், சத்தான ஆகாரங்களும் உடலை போலவே கூந்தலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருந்தன. இப்போது வெளியில் செல்லும் போது உண்டாகும் மாசு, தூசிகளே கூந்தலை வலுவிழக்க போதுமானதாகிறது. தினமும் கூந்தலுக்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கினாலே உங்கள் கூந்தல் எப்போதும் வலுவாக இருக்கும்.
​எண்ணெய் தடவும் போது - கூந்தல் பராமரிப்பு

தலைக்கு எண்ணெய் வைக்கும் போதெல்லாம் நீங்கள் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி கூந்தலுக்கு மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெயை மேலாக தேய்க்காமல் விரல்களால் தொட்டு விரல்களை கூந்தலில் நுழைத்து ஸ்கால்ப் பகுதி வரை நன்றாக கூந்தலுக்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் செய்தால் போதுமானது. கூந்தலுக்கு எண்ணெய் வைத்தால் முடி பிசுபிசுப்பு அதிகரிக்குமே என்று நினைப்பவர்கள் அதிக எண்ணெய் வைக்காமல் விரல்களால் தொட்டு மசாஜ் செய்தால் கூட போதுமானது.

பலன்

கூந்தல் வளர்ச்சிக்கும் வேர்க்கால்களுக்கும் உறுதுணையாக இருக்கும். மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸாக வைக்க கூடுதலாக உதவும்.
​ஆயில் மசாஜ் - கூந்தல் பராமரிப்பு


நிச்சயம் இது தேவை பார்லர் சென்று தான் மசாஜ் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருக்கும் போதும் நீங்களே கூட செய்து கொள்ளலாம். உயர் ரக ஆயில் வாங்கி பயன்படுத்த வெண்டிய அவசியமில்லை. சுத்தமான தேங்காயெண்ணேய், நல்லெண்ணெய் கூட போதுமானது. மாதம் ஒருமுறை எண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலை முதல் ஸ்கால்ப் நுனி வரை தடவி விடவும். பிறகு சீப்பு கொண்டு கூந்தலை நன்றாக 100 முறையாவது சீவிவிட வேண்டும்.

பலன்

ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவிழக்காமல் பாதுகாக்கப்படுகிறது. கூந்தலில் வெடிப்பு, பிளவு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் முடி உதிர்வு குறைகிறது. கூந்தலை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. அதிகம் மெனக்கெட வேண்டாம் மாதம் 4 முறை போதும்.
​தலை குளியலின் போது - கூந்தல் பராமரிப்பு

வாரம் ஒருமுறை தலைக்கு குளித்தாலும் கூட தலையில் தூசி இல்லாமல் அழுக்கில்லாமல் வைத்துகொள்ள வேண்டும். இல்லையெனில் பொடுகு, பேன், முடி உதிர்வு போன்றவை உண்டாக்கும். தலை குளியலோடு கூந்தல் வளர்ச்சிக்கு வேண்டிய பராமரிப்பையும் செய்துவிடுங்கள். இதற்கென தனி பராமரிப்பு தேவையில்லை.

தலைக்கு குளித்ததும் கூந்தலுக்கு வலு கொடுக்க வேண்டுமே. அதனால் அரிசி கழுவிய நீரை கொண்டு தலையை அலசுவது முடிக்கு போஷாக்கும், வலுவும் கொடுக்கும். இதே போன்று உருளைக்கிழங்கு நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டும் அலசலாம்.
​கூந்தல் சுத்தத்துக்கு - கூந்தல் பராமரிப்பு

முடி அழுக்கை நீங்கதான் முடிக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்துவது உண்டு. தற்போது கூந்தல் உதிர்வுக்கு, கூந்தல் நுனி வெடிப்புக்கு, கூந்தல் வறட்சிக்கு, கூந்தல் வறட்சிக்கு என்று தனித்தனியாக ஷாம்புவை பயன்படுத்துவது உண்டு. அதோடு நறுமணத்துக்காகவும். இப்படி கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை அவ்வபோது மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் கூந்தலுக்கு நன்மை கிடைக்காது.

முடி வளர்ச்சிக்கு எப்போதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள். இயன்றவரை கெமிக்கல் இல்லாதவையாக இருக்கட்டும். இந்த நான்கையும் தொடர்ந்து செய்தாலே முடி ஆரோக்கியமாக பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment