
கடலுார்; பஸ் போக்குவரத்து ஜூன் 1ல் துவங்க உத்தரவு வரலாம் என்பதால், கடலுார் மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக பனிமனைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்ட்டது. இதனால், கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 11 பணிமனைகளில் 610 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஸ் இன்ஜின் பராமரிப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த 18 ம் தேதி முதல் போக்குவரத்து துவக்கப்படலாம் என்பதால், கடலுார் மாவட்ட பணிமனைகளில் பஸ்கள் கிருமிநாசினி தெளித்தும், இன்ஜின்கள் சரிபார்ப்பது, பஸ்களை சுத்தம் செய்தும் தயார் படுத்தப்பட்டது. டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பட்டது.ஆனால், ஊரடங்கு 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டதால், பஸ் போக்குவரத்தும் துவக்கப்படவில்லை.ஊரடங்கு இன்றுடன் முடிய உள்ள நிலையில், நாளை ஜூன் 1ம் தேதி பஸ் இயக்க திடீர் அறிவிப்பு வரலாம் என்பதால், மீண்டும் போக்குவரத்துக்கழகங்கள் தயார் நிலைக்கு மாறியுள்ளன. கடலுார் மாவட்ட பணிமனைகளில் மீண்டும் அனைத்து ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது.



No comments:
Post a Comment