பிளஸ் 1 விடைத்தாள்களை, நாளை மறுநாள் முதல், திருத்தும் மையங்களுக்கு அனுப்ப, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன்,15 முதல் தேர்வுகள் நடக்க உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 விடை திருத்தம், மே, 27ல் துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து, பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட உள்ளன. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாளை மறுநாள், இந்த பணியை துவங்கி விரைவில் முடிக்க வேண்டும். ஜூன், 10 முதல், விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Monday, June 1, 2020
பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment