Wednesday, June 17, 2020

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறு சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தல்


புதுடில்லி: 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அமித் பத்லா என்பவர் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று (ஜூன் 17) விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment