Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 17, 2020

கரோனாவுக்கு எதிராக உயிர் காக்கும் மருந்தாக மாறிய 'டெக்ஸாமெதசோன்'

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

குறைவான விலையில் கிடைக்கும் டெக்ஸாமெதசோன் என்ற மருந்து கரோனா நோய்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி இறப்பு விகிதத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நம்பிக்கை அளிக்கும் உயிர்காக்கும் மருந்து

கரோனா வைரஸால் உலகம் முழுக்க தினம் தினம் ஆயிரக்கணக்கில் இறந்துவருகின்றனர். இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டெக்சாமெதசோன் மருந்து சிகிச்சை சிறப்பான முன்னேற்றத்தை கொடுப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். தீவிரமான பாதிப்புடைய நோயாளிகளுக்கு இவை உடனடியாக அளிக்கப்படவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மருந்தானது வெண்ட்டிலேட்டர்களில், ஆக்சிஜன் உதவி கிடைக்க வேண்டிய சுவாச பாதிப்பின் போது அளிக்கப்படும் உயிர்காக்கும் மருந்தாக செயல்படுவதாக ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.
டெக்சாமெத்தசோன்

கரோனா நோய் பாதிப்பில் வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 8 பேரில் ஒருவரை இம்மருந்து காப்பாற்றுகிறது. அதேப்போல், ஆக்சிஜன் உதவியுடன் உயிருக்கு போராடும் 25 நோயாளிகள் ஒருவர் உயிர் பிழைப்பதாகவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விலைப்படி டெக்சாமெதசோன் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த மருந்தை பொருத்தமான நேரத்தில் அளிக்க வேண்டும். லேசான தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருந்து தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் கூறுகையில், 'கரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறும் நோயாளிகளின்
இறப்பு விகிதத்தை குறைப்பதில் டெக்சாமெதசோன் மருந்து பயனுள்ள வகையில்
இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் சிறப்பான செய்தி என்றும், இங்கிலாந்து அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News