Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 26, 2020

ரத்து செய்யப்பட்ட 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை என்ன ?: சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல்


டெல்லி : சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ, நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும், 3 பாடங்களுக்கு மட்டும் எழுதியவர்களுக்கு, சிறந்த 2 பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும், 1 அல்லது 2 பாடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment