Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 21, 2020

தமிழகம் , புதுச்சேரி, கர்நாடகாவை தொடர்ந்து , ஆந்திராவிலும் 10 ம் வகுப்பு பொது தேர்வு ரத்து...

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் தேர்வுகளை தள்ளி வைத்து கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு செய்தனர்.

மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதினால் பல தேர்வுகளை ரத்து செய்தும் அறிவிப்புகள் வெளியானது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வானதாக பல்வேறு மாநில அரசுகளும் அறிவித்தது.

இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வும் பல்வேறு மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்புதேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகி ஆந்திராவில் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம் என அம்மாநில கல்வித்துறை மந்திரி சுரேஷ் தெரிவித்துள்ளார். தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News