Join THAMIZHKADAL WhatsApp Groups
அதில், 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என 35,546 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, பள்ளி நிர்வாகங்கள் கடந்த 12ம் தேதி ஒப்படைத்தன. நேற்று முன்தினம் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள், ரேங்கார்டு ஆகியன ஒப்படைக்கப்பட்டன. அவற்றை மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் சரிபார்த்து, பாட வாரியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண் குறித்த விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று முதல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.கிரேடு அடிப்படையில்மதிப்பெண் பட்டியல் இதற்கிடையே மதிப்பெண் பட்டியலை கிரேடு அடிப்படையில் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'அரசு பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (இ.எம்.ஐ.எஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.
அதே சமயத்தில் தனியார் பள்ளிகள் இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடிக்கின்றனவா என தெரியவில்லை. இதனால், மதிப்பெண்களை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின்போது விடுமுறை எடுத்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வருகை பதிவேடு குறைவாக இருந்தால், அவர்களின் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, 6 முதல் 8 ம் வகுப்பு வரை தற்போது நடைமுறையில் உள்ள கிரேடு அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்க வேண்டும். கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கினால் எவ்வித சிக்கல் இருக்காது' என்றார்.
No comments:
Post a Comment