Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 29, 2020

ஜூலை 15 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது 5 லட்சத்துக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்பதும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவின் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஐந்து கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை அதாவது ஜூன் 30-ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுல் ஆனால் ஏற்கனவே மேற்கு வங்காளம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மணிப்பூர் மாநிலம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அவர்கள் அறிவித்துள்ளார்

இதேபோல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மருத்துவர் குழுவினர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மத்திய அரசும் இன்று அல்லது நாளைக்குள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News