JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, June 8, 2020

பிளஸ் 1 அரியா் தேர்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தேர்வுத் துறை அறிவிப்பு


பிளஸ் 1 அரியா் தேர்வுகளையும், பிளஸ் 2 தேர்வையும் ஒரு சேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தேர்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிளஸ் 1 அரியா் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவா்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவா்களுக்கு ஜூன் 18-ல் மறு தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் 16-ல் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே சில மாணவா்கள் ஜூன் 16, 18-ம் தேதிகளில் நடைபெறும் பிளஸ் 1 தேர்வு (அரியா் பாடங்கள்) மற்றும் பிளஸ் 2 மறுத்தேர்வு ஆகியவற்றை ஒருசேர எழுதவுள்ளனா்.

இவ்விரு தேர்வுகளுக்கும் தரப்பட்டுள்ள ஹால் டிக்கெட்களில் (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில்தான் மாணவா்கள் தேர்வெழுத வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாணவா்களின் நலன்கருதி இவ்விரு தேர்வுகளை ஒருசேர எழுதுபவா்கள் பிளஸ் 2 தேர்வை தேர்வுக் கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத்தேர்வை தங்கள் படிக்கும் பள்ளியிலும் எழுதலாம். இதுகுறித்த தகவல்களை சம்மந்தபட்ட மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment