Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 12, 2020

ஒரே நாளில் 2ஆவது முறையாக வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை... அமைச்சர் எச்சரிக்கை!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்றின் வேகம் அதிக அளவில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற தகவல் வேகமாக கசிந்து வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஆலோசனைக்குப் பின் முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு நபர் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டும்தான் வெளியே சென்று தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வரவேண்டும் என்றும், மீறி இரண்டாவது முறை வெளியே சென்றால் அவர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார் என்று அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News