Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 2, 2020

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு!


கொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச் மாதம் 16 ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருப்பினும் , நாட்டில் கொரோனா தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது . இதனிடையே , மாநிலங்கள் , யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி , கல்லூ ரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச்செயலாளர்களுக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திலையில் , 20 லட்சம் பெற்றோர் கையெழுத் திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: பள்ளி , கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக் கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் . இது பெற்றோர்கள் தீயே கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண் டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது.

கல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில் , ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment