Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விபரங்களை, பள்ளி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்க, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, இரண்டாயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள், பள்ளி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தற்போது, பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான வங்கிக்கணக்குகள் குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கு, தயார்நிலையில் வைத்திருக்க, ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில், பெரும்பான்மையான மாணவர்களின் வங்கி கணக்கு குறித்த விபரங்கள் பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வங்கி கணக்கு விபரங்கள் விடுபட்டுள்ள மாணவர்களின் விபரங்களை உடனடியாக பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment