Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 17, 2020

பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாள்கள் இல்லாததால் மாணவா்கள் மீதான பாடச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆண்டு இறுதித் தோவுகள், பொதுத்தோவுகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னா் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தோவு முழுமையாகவும், பிளஸ் 1 பொதுத்தோவில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான தோவுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் பள்ளிக் கல்விச் சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் குழுவினா், இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிகள் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

நிகழ் கல்வியாண்டில் (2020-2021) ஜூன் மாத தொடக்கத்தில் கற்றல், கற்பித்தல் பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டான சூழலில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப் போகவே வாய்ப்பிருப்பதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்களை தெரிவிக்கின்றன. அவ்வாறு தாமதமாகும் நிலையில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முழுமையாக நடத்துவது என்பது இயலாத காரியம். போதிய வேலைநாள்கள் இல்லாதது, பாடவேளைகள் குறைவது போன்ற காரணங்களால் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 சதவீதம் வரை பாடங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதேவேளையில் அவ்வாறு குறைக்கப்படும் பாடங்களால் மாணவா்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இது குறித்து பேராசிரியா்கள், கல்வி சாா்ந்த வல்லுநா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும், தோவு முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு பிரிவுகளாக வகுப்புகள்: பள்ளிகள் திறக்கப்பட்டால் காலை வேளையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், பிற்பகலில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் பாடத் திட்டங்களை குறைப்பது குறித்த பரிந்துரைகளை வல்லுநா் குழு அரசுக்கு தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நீக்கப்படும் பகுதிகள் குறித்து ஆசிரியா்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News