Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

6 பழக்க வழக்கங்களை கடைபிடித்தால், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாம்: ப்ரப்தீப் கௌர்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பலர் கொரோனாவில் இருந்து தப்பிக்க எந்த மாதிரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து ICMR துணை இயக்குநர் ப்ரப்தீப் கௌர் 6 விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

1.தினசரி புரதச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.யோகா, நடைபயிற்சி, வீட்டு வேலைகள் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை வாரத்திற்கு 150 நிமிடங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
3.நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ள நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

4.அன்றாட உணவின் மூலம் போதிய வைட்டமின் கிடைக்கவில்லை என்றால் வைட்டமின் சி மற்றும் டி ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

5.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதிய அளவு தூக்கம் அவசியம்.

6.புகைப்பிடித்தலை கைவிட வேண்டும். புகைப்பழக்கத்தைக் கைவிட இதுவே சிறந்த தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து தப்பிக்க தனியாக மருத்து இருக்கிறதா என்று கேட்கும் மக்கள் மேற்கூறிய 6 பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து எளிதாக விடுபடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News