Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

ஒன்றரை மாதத்தில் பைக் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவன் !



கேரளாவில் ஒன்றரை மாதத்தில் பைக் ஒன்றை தயாரித்த 9வது படிக்கும் மாணவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்

கேரளாவைச் சேர்ந்த 9தாவது படிக்கும் மாணவன் அர்ஷாத். இவரது தந்தை கொச்சியில் பைக் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
தன்னுடைய தந்தையின் மெக்கானிக் கடைக்குச் சென்று வரும் அர்ஷாத் அங்குள்ள தேவையற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு பைக்கை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அர்ஷாத், இந்த பைக்கை உருவாக்க நான் ஒன்றரை மாதங்கள் எடுத்துக்கொண்டேன். இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 50கிமீ செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.


சைக்கிள் ஸ்டைலில் எஞ்சின், கியர் எல்லாம் பொருத்தப்பட்ட இந்த பைக்கிற்கு இணையத்தில் பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வாகனத்தை உருவாக்கிய அர்ஷாத்துக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

No comments:

Post a Comment