JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக இருக்கும். காரணம் என்ன வென்றால் "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்தகாலத்திலேயே அறிந்து வைத்துள்ளார்கள். இந்த நுட்பம் மிகவும் சரியான விசயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது. இயற்கை சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும்.மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம்.இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும் என்பதால் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரை பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.அது நாலாபுறமும் 75000 சதுரமீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!இது ஒரு தோராயமான கணக்கு தான்.இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
No comments:
Post a Comment