Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 30, 2020

உண்ணும் உணவிற்கு வங்கி கணக்கில் பணம்.. தமிழக அரசு அதிரடி..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காலவரையற்ற மூடப்பட்டுள்ளது. தற்போதுவரை கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் தனியார் பள்ளிகள் சில நாட்களாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளியில் வழங்கப்பட்டு வந்த சத்துணவை நம்பி பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து படிப்பை படித்து வந்தனர். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இந்த சத்துணவு மிகவும் உதவியாக இருந்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஆகையால் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் சத்துணவை உண்டுவந்த மாணவர்களின் வங்கி கணக்கில் அவர்கள் உணவுக்கான பணத்தை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News