Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 2, 2020

நடப்பாண்டு ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு


பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஏற்படுத்தியுள்ள உதவி மையங்கள் மூலம் மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாகவும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது மாணவர்கள் ஏராளமாக உதவி மையங்களில் திரள்வார்கள் என்பதாலும், முதன் முறையாக ஆன்லைன் முறையில் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை வீட்டில் இருந்தே பதிவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மாணவர்கள் தங்களின் 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். மேலும் கலந்தாய்விற்கு பதிவு செய்யமட்டும் மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு உதவி மையங்கள் செயல்படும் என்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உதவி மையங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கலந்தாய்விற்கு பதிவு செய்ய குறைந்த அளவு மாணவர்களே உதவி மையங்களுக்கு வருவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு உதவிமையங்கள் செயல்படும் என்று உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment