Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 25, 2020

பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனா பாதிப்புகளால், மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2020-21 ம் கல்வியாண்டு துவங்கியும், வைரஸ் பாதிப்புகள் பரவலாக இருப்பதால், பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் அறிவிக்கப்படவில்லை.புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் ஜன., மாதம் முதலே தயார்நிலையில் இருந்தது. மார்ச் மாதமே, அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் மாவட்டம் வாரியாக சென்னையிலிருந்து வினியோகிக்கப்பட்டது. மாவட்டங்களிலிருந்து கல்வி மாவட்டங்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடுமலை கல்வி மாவட்டத்தில், 36 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. உடுமலை கல்வி மாவட்டப்பள்ளிகளுக்கான புத்தகங்கள் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. சரக்கு வாகனங்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News