Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 16, 2020

எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடித்து வந்தால் உண்டாகும் சிறப்பு ஆற்றல்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

உடல் எடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் மற்றொரு விஷயத்தையும் நாம் முழுமனதாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்பதால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு விடாது என்பது தான். ஆகையால் நீங்கள் நிச்சயம் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். அதை எவ்வளவு குடிக்க வேண்டும், எத்தனை நாள் குடிக்கலாம் போன்ற விவரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து கொள்ளலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்வோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்குள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அதை முதலில் பாருங்கள். வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள். நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை.

எலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் கூடுதலான அளவில் கிடைக்கும். ஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த எலுமிச்சை நீரைக் குடிக்கலாம். கேட்டால் , ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News