Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 19, 2020

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங், பார்மஸி படிப்புகளுக்கு தேர்வு

புதுச்சேரி : 'எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங், பார்மஸி படிப்புகளுக்கு அக்டோபர், நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும்' என, புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லுாரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வாணையம், மருத்துவம் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், பார்மஸி கவுன்சில் ஆகியவை, தற்போது தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.எனவே எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரியர் எழுதுவதற்காக துணை தேர்வும், பல் மருத்துவம், நர்சிங், பார்மஸி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு பருவத்தேர்வுகள், வரும் அக்டோபர், நவம்பர் மாதம் நடத்தப்படும். எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு சூழ்நிலையை பொறுத்து, தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எவ்வளவு பேருக்கு தேர்வுபுதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் நான்கு மருத்துவ கல்லுாரி, இரண்டு நர்சிங் கல்லுாரி, இரண்டு பல் மருத்துவ கல்லுாரி, ஒரு பார்மஸி கல்லுாரி இயங்கி வருகின்றன. இக்கல்லுாரிகளில் பயிலும் 800 மாணவர்கள், புதிய அறிவிப்பின்படி, அக்டோபர், நவம்பரில் தேர்வு எழுத வேண்டி இருக்கும்.

No comments:

Post a Comment