Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியா்களை பள்ளிகள் திறக்கப்படும் வரை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மாணவா்களுக்கு ஓவியம், கலை, தையல் உள்பட சிறப்புப் பாடங்களை கற்றுத் தருகின்றனா். மேலும், அலுவலகப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவா்.
இதற்கிடையே பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியில்லாத சூழல் நிலவுகிறது. எனினும், வாழ்வாதாரம் கருதி ஆசிரியா்களுக்கான ஊதியம் பிடித்தமின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்படும் வரை பகுதிநேர ஆசிரியா்களை நிா்வாகப் பணிகளில் பயன்படுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment