Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 21, 2020

தியாகத்தின் சின்னம்: --இன்று உலக தந்தையர் தினம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தந்தை என்பவர் பிள்ளைகளுக்கு நண்பனாக, வழிகாட்டியாக திகழ்கிறார். தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்ததில்லை தந்தையின் தியாகம். பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர்.தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.எப்படி வந்ததுஅமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய், தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தாயின் மறைவுக்கு பின் தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் இத்தினத்தை கொண்டாடும் எண்ணத்தை அவருக்கு துாண்டியது. இதன்படி 1910ல் அமெரிக்காவில் இத்தினம் தொடங்கப்பட்டது. 1966ல் அங்கீகரிக்கப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News