Search This Blog

Tuesday, June 2, 2020

ரேசன் கடைகளில் இலவச மாஸ்க்!? - எடப்பாடியாரின் அசத்தல் முடிவு!

0 comments
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் முகக்கவசங்களை இலவசமாக வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும் தொழில்துறைகள் செயல்பட அரசு தளர்வுகளை அளித்துள்ளது. சென்னையிலும் டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழத்தின் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்தியாவிலேயே அதிக வெண்டிலேட்டர்கள் தமிழகத்தில்தான் உள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச மாஸ்க்குகள் வழங்க பரிசீலித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment