Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 2, 2020

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பதி கோயிலில் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் 6 அடி இடைவெளியுடன் கோவிலுக்கு வந்து தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்பட்டு, பக்தர்களின் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் மாதம் 8ம் தேதிக்குப் பிறகு மதவழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலை உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment