Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சுதந்திர தினவிழாவில், தமிழக முதல்வரால் வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கை:சுதந்திர தினவிழாவில், தமிழக முதல்வரால் விருது வழங்கி கவுரவிக்கப்படும். தமிழகத்தில் பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்ட, ஐந்து ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவருக்கு விருது வழங்கப்படும்.
மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றிய, சமூக சேவை நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம், பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்களுக்கு விருது வழங்கப்படும்.விருது பெற விரும்புவோர், சமூகநல அலுவலகத்தில், 15ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை பெற்று, தேவையான ஆவணங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment