Join THAMIZHKADAL WhatsApp Groups

கோவை: கொரோனா எதிரொலியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களின் உள்ளடக்கத்தை, 30 சதவீத அளவுக்கு குறைக்க, பரிந்துரை குழு திட்டமிட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என, கணிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களின் உள்ளடக்கத்தை, 30 சதவீதம் வரை குறைக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், &'ஆசிரியர்கள், புத்தக ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு, பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறனும், பாடங்களின் தரமும் பாதிக்காத வகையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்படலாம். தமிழ், ஆங்கில பாடங்களில் இலக்கண பகுதிகள் தக்க வைத்து கொள்ளப்படும். உரைநடை பகுதிகள், கட்டுரைகள் நீக்கப்படலாம்&' என்றனர்.
No comments:
Post a Comment