Join THAMIZHKADAL WhatsApp Groups

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அதனால் தேர்வுகளை ரத்து செய்யுமாறும் ஹரியாணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறும், இதனால் மதிப்பெண்கள் குறைவாகப் பெறும் சூழ்நிலையில் அந்தந்த மாணவர்கள் விரும்பும்பட்சத்தில் பொது முடக்கத்துக்குபின்னர் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்கள் வழங்கலாம் என்றும் குழு கூறியுள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழகங்களில் ஜூலை மாதத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment