Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 23, 2020

கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!


கொரோனா வைரஸை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தான கொரோனிலை(Coronil) நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் யோகா குரு பாபா ராம்தேவ்!

கொரோனில்(Coronil) எனபது மாத்திரைகள் கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து எனவும், தங்களது சோதனையில் கொரோனா நோயாளிகளை இந்த மருந்து குணப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மருந்து கொரோனா நோயாளிகள் மீது இரண்டு முறை முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும் ராம்தேவ் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில், ராம்தேவ் கூறுகையில், "முழு நாடும், உலகமும் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. இன்று கொரோனாவின் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறோம். உலகம் முழுவதும் அவிட்டி அடிப்படையிலான மருத்துவத்தில் செயல்படுகிறது. ஆனால் எங்கள் நிறுவனம், பேராசிரியர் பல்பீர் சிங் தோமர் மற்றும் ஆச்சார்யா ஜி ஆகியோரின் கூட்டு முயற்சியால், கொரோனாவின் மருந்தை ஆயுர்வேதா முறையில் தயாரித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "மருத்துவ வழக்கு ஆய்வில் நாங்கள் 280 நோயாளிகளைச் சேர்த்துள்ளோம், அனைவரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவ கட்டுப்பாட்டு சோதனையும் செய்யப்பட்டு விட்டது. பதாஞ்சலி ஆராய்ச்சி மையம் பராய் மற்றும் நிம்ஸ் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 95 நோயாளிகள் பங்கேற்றனர் மற்றும் 3 நாட்களுக்குள் 69% நோயாளிகள் மீட்கப்பட்டன், 7 நாட்களுக்குள் 100% பேரும் நோய்தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர்" என தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் பற்றிய தகவல்களை அளித்த யோகா குரு, ஜனவரி மாதம், சீனாவில் கொரோனா தொடங்கியபோது, ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் இரவும் பகலும் கடுமையாக உழைத்தனர். இந்த கடின உழைப்பின் பலனாய் தற்போது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். நூற்றுக்கணக்கானோர் இந்த மருந்து மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நிறுவனம் உருவாக்கிய ஆயுர்வேத மருந்து 5-14 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்தும் என்று பதாஞ்சலி குழும தலைவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment