கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் 150 புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், வரும் 30 ம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படும் என கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி வேலை நாட்கள் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில், பாடதிட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment