
சிவகாசியில் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றி பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளான்.
சாதனை படைத்த மாணவன் சாட்சியார்புரத்தைச் சேர்ந்த வீரபத்திரன் - வாணி தம்பதியினரின் மகன் நிகில் ஆதித்யன் ஆவார். இவர் கோவையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றியமைக்க முடிவு செய்தார் நிகில். அவர் அமெரிக்காவில் உள்ள எல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் முதலீடு சந்தை என்ற ஆன்லைன் படிப்பில் சேர்ந்தார்.
இதில் நன்றாக படித்த நிகில் ஆதித்யன், நோபல் பரிசு பெற்ற ராபர்ட் ஜேம்ஸ் ஷில்லர் என்பவரால் அங்கீகரிக்கப்பட்ட ஹானஸ்ட் பட்டம் பெற்றுள்ளார்.
இதே போன்று தரவு அறிவியல் என்ற ஆன்லைன் படிப்பிலும் நிகில் சேர்ந்தார். இது அமெரிக்காவில் உள்ள மற்றொரு பல்கலைக்கழகம் ஆன ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மற்றொரு ஆன்லைன் படிப்பாகும். இதிலும் நிகில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment