Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 11, 2020

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் பொது தரிசனம்



இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதையடுத்து, திருப்பதியில் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க 3 நாள் சோதனை வெள்ளோட்டம் கடந்த 8-ம் தேதி தொடங்கியது.

இந்த சோதனை வெள்ளோட்டத்தில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றுடன் வெள்ளோட்டம் நிறைவு நிறைவு பெற்றநிலையில், இன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை விஐபி தரிசனமும் பிறகு இலவச சர்வ தரிசனமும் தொடங்குகிறது.

இதில், சமூக இடைவெளியை முககவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்க 18 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் விஷ்ணு நிவாசம் (8 மையங்கள்) ஸ்ரீநிவாசம் (6 மையம்), அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் (4 மையம்) ஆகிய இடங்களில் இலவச தரிசனம் டோக்கன்களை பெற்று கொள்ளலாம்.

இந்த டோக்கன்களை பக்தர்கள் நாள் ஒரு நாள் முன்னதாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தான விடுதிகளில் 2 பக்தர்களுக்கு ஒரு தங்கும் அறை வீதம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment