Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 21, 2020

தலைக்கு எண்ணெய் வைக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சிலருக்கு தலையில் எண்ணெய் வைப்பது என்றாலே அலர்ஜி போல் தெரித்து ஓடுவார்கள். காரணம் எண்ணெய் பிசுக்கு முகத்தை டல்லாக்கும். வழித்த தலையாக இருக்கும். ஃபிரெஷ் ஃபீல் இருக்காது என பல காரணங்களை அடுக்குவார்கள். தலைக்கு பளபளப்பு அளிக்கவும், சிக்கல்கள் இல்லா கூந்தலைப் பெறவும் மாய்ஸ்ரைஸர் போல் ஹேர் கண்டிஷ்னர் வந்தது. ஆனால் இயற்கையில் தலைக்கு சிறந்த மாய்ஸ்சரைஸர் எனில் அது எண்ணெய்தான். எனவே முடிந்தால் இரவிலாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி காலையில் தலை குளித்துவிடுங்கள்.

தலைமுடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதற்கு தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் வேர்கள் எண்ணெயை நன்கு உறிஞ்சிக்கொள்ளும். மேலும் மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறையும்.

பூஞ்சைகள், காற்று மாசுபாட்டால் தலைமுடி சேதமாகுதல், தொற்று, பேன் என தலைமுடியை சேதப்படுத்தும் விஷயங்கள் பல இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான். இதைத் தொடர்ந்து சரியாகச் செய்துவர முடிப் பிரச்னை இருக்காது. தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊறிய பின் தலைக்குக் குளித்துப் பாருங்கள். தலைமுடி பளபளவென மின்னும். பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.

பொடுகுத் தொல்லைக்கு தலைமுடி வறட்சியும் முக்கியக் காரணம். இன்று பொடுக்குத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். அதற்கு எண்ணெய் வைக்காதது முக்கியக் காரணம். தலைக்கு எண்ணெய் வைப்பது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்குகிறது. பொடுகுத் தொல்லையும் இருக்காது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News